பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - தலைவர்கள் வாழ்த்து!
இந்திய பிரதமர் மோடி தனது 75 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து அரசியல், சினிமா என பல்வேறு தரப்பினரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் வாழ்த்தில்,
”இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். உங்கள் அசாதாரண தலைமை மற்றும் கடின உழைப்பின் மூலம் நாட்டில் சிறந்த இலக்குகளை அடையும் கலாச்சாரத்தை வளர்த்துள்ளீர்கள். நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவும், உங்கள் தனித்துவமான தலைமையுடன் நாட்டை முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லவும் நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்தில்,
”பிரதமர் மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தியா உலக அரங்கில் ஒரு முத்திரையைப் பதித்து, வளர்ந்த நாடு என்ற இலக்கை நோக்கி சீராக முன்னேறி வருகிறது. தாய்நாட்டின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட உங்களுக்கு நீண்ட, ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“பிரதமர் நரேந்திர மோடி நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிறந்தநாள் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்தில்,
”தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் சின்னம், கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கு உத்வேகம், பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளில் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். சமூக வாழ்வில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டு மக்களின் நலனுக்காக உழைத்து வரும் மோடி ஒவ்வொரு குடிமகனுக்கும் 'தேசம் முதலில்' என்ற ஒரு உயிருள்ள உத்வேகமாக இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பிரதமர் மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்உங்கள் தொலைநோக்குத் தலைமை மற்றும் அயராத அர்ப்பணிப்பு ஆகியவை லட்சக்கணக்கான மக்களை தொடர்ந்து ஊக்குவிக்கிறது.உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், நமது மகத்தான தேசத்தை வழிநடத்த தொடர்ந்து பலம் கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வாழ்த்தில்,
” பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நமது தமிழக மக்கள் சார்பாகவும், தமிழ் நாடு பாஜக சார்பாகவும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று போல் என்றும் நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் மேலும் பல்லாண்டு நமது பாரத தேசத்தை அவர் வழிநடத்திச் செல்ல வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துகொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அனைத்து நலன்களுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் வெற்றி பெறவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மிகவும் மரியாதைக்குரிய அன்பான பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நமது அன்பான தேசத்தை வழிநடத்தும் நித்திய பலம் கிடைக்க வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த்” என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் மற்று நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்திய மக்களுக்கு சேவை செய்ய அவருக்கு நல்ல ஆரோக்கியமும் பலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் பல்வேறு தலைவர்களும் அவருக்கு தம் பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.