For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் நிறைவு விழாவில், பிரதமர் மோடி பங்கேற்கிறார்" -அண்ணாமலை!

10:04 PM Feb 19, 2024 IST | Web Editor
 என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் நிறைவு விழாவில்  பிரதமர் மோடி பங்கேற்கிறார்   அண்ணாமலை
Advertisement

பல்லடத்தில் வரும் 27ம் தேதி நடைபெறும் "என் மண், என் மக்கள்" யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக தலைமை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளை கைப்பற்ற திட்டம் வகுத்துள்ளது. இதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் அமித்ஷாவின் நடை பயணத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நடைபயணத்தின் போது மத்திய அரசின் திட்டங்களையும், மோடியின் சாதனைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் 190க்கும் மேற்பட்ட தொகுதியில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில் வருகிற 27ஆம் தேதி தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.

பல்லடத்தில் வரும் 27ம் தேதி நடைபெறும் "என் மண், என் மக்கள்" யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த அவர், “ வரும் 27, 28 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகிறார்.  என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். வரும் 27ம் தேதி பல்லடத்தில் பாத யாத்திரை நிறைவு விழா நடைபெறுகிறது.

கட்சியின் தொண்டர்கள் அழைத்தார்கள் அதனால் தேசிய செயற்குழு கூட்டத்தில் தரையில் அமர்ந்தேன், நானும் பாஜகவின் ஒரு சாதாரண தொண்டன். அனைவரும் சமம் என்பதே பாஜகவின் கொள்கை கோட்பாடு.  கட்சி தலைவராக இருந்தாலும் தானும் பாஜகவில் ஒரு தொண்டர் தான்.

தேசிய தலைவர்களுடன் கூட்டணி குறித்து எந்த பேச்சு வார்த்தையும் ஈடுபடவில்லை.  தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள செல்வப்பெருந்தகைக்கு வாழ்த்துகள்”  என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

Tags :
Advertisement