Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘குடியரசுத் தலைவர் உரை ஒளிப்பரப்பின் போது பிரதமர் மோடி 73 முறை காட்டப்பட்டார் ; ராகுல் காந்தி 6 முறை மட்டுமே சன்சத் நேரலையில் காட்டப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு!

06:36 PM Jun 27, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் உரையின் நேரடி ஒளிபரப்பின்போது பிரதமர் மோடி 73 முறையும், ராகுல் காந்தி 6 முறை மட்டுமே காட்டப்பட்டனர் என காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார். 

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. ஜவஹர்லால் நேருவுக்கு பின் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றவர் என்ற பெருமையையும் நரேந்திர மோடி பெற்றார்.  இதனையடுத்து 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24 ஆம் தேதி தொடங்கியது. அன்று பிரதமர் மோடி உள்பட, உறுப்பினர்கள் பலர் எம்பியாக பதவியேற்றனர். அன்று பதவியேற்காத பலரும் இரண்டாவது நாளாக ஜுன் 25 ஆம் தேதி  பதவியேற்றனர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 எம்பிக்களும் பதவியேற்றனர். பதவியேற்பின் போது ஒவ்வொரு எம்பியும் ஒவ்வொரு முழக்கங்களை கூறி பதவிப் பிரமாணம் செய்தனர். இந்நிலையில் இன்று முதல் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில் மொத்தம் 51 நிமிடங்கள் உரையாற்றிய குடியரசு தலைவரின் உரையின் போது வெறும் 6 முறை மட்டுமே எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி திரையில் காட்டப்பட்டதாக காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

51 நிமிட ஜனாதிபதி உரையில் யார் யார் எத்தனை முறை காண்பிக்கப்பட்டனர்?

சபைத்தலைவர் நரேந்திர மோடி - 73 முறை

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி -  6 முறை

அரசு - 108 முறை

எதிர்க்கட்சி - 18 முறை

சன்சத் டிவி என்பது நாடாளுமன்றத்தில் நடக்கும் அவை நடவடிக்கைகளை  ஒளிப்பரப்புவதற்காக தானே தவிர, கேமராமேன் தனது விருப்பத்தை ஒளிபரப்ப அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
BJPCongresDroupadi Murmujairam rameshNarendra modi
Advertisement
Next Article