3 நாள் அரசுமுறைப் பயணமாக #America புறப்பட்டார் பிரதமர் மோடி!
‘குவாட்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டார்.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பின் உச்சி மாநாடு அமெரிக்காவின் வில்மிங்க்டன் நகரில் நடைபெற இருக்கிறது.
இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டார். ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் இந்தோ பசிபிக் பிராந்திய நிலவரங்கள் குறித்து 4 நாட்டு தலைவர்களும் விவாதிக்க இருக்கின்றனர். ‘குவாட்’ உச்சி மாநாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி, பின்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
‘குவாட்’ உச்சி மாநாட்டைத் தொடர்ந்து வரும் 23ஆம் தேதி ஐநா பொதுச்சபை கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்த இருக்கிறார். இந்த பயணத்தின்போது பல்வேறு நாட்டு தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச உள்ளார்.