Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் பிரதமர் மோடியின் ஊழல் பள்ளி மூடப்படும் - ராகுல் காந்தி!

02:08 PM Apr 20, 2024 IST | Web Editor
Advertisement

“நாட்டில் ஊழல் எப்படி செய்ய வேண்டும் என சொல்லிக் கொடுக்கும் பள்ளியை பிரதமர் மோடி நடத்துகிறார்” என ராகுல் காந்தி எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். 

Advertisement

தேர்தல் நன்கொடை பத்திரம் விவகாரத்தில்,  ராகுல் காந்தியை பிரதமர் மோடி 'ஊழலில் சாம்பியன்’ என்று விமர்சித்திருந்தார்.  இந்நிலையில் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.  அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“பிரதமர் நரேந்திர மோடி,  நாட்டில் ஊழல் செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுக்கும் பள்ளியை நடத்தி வருகிறார்.  அங்கு 'முழு அறிவியல் ஊழல்' என்ற பாடத்தின் கீழ், 'நன்கொடை வியபாரம்'  உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் அவரே விரிவாகக் கற்பிக்கிறார்.

ரெய்டு நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி? நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன? ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது? 'ஊழல் குகை'யாக மாறியுள்ள பாஜக தலைவர்களுக்கு இந்த 'கிராஷ் கோர்ஸ்' கட்டாயமாக்கியுள்ளது.  இந்தியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்ததும், இந்த ஊழல் பள்ளியைப் பூட்டி,  இந்தப் பாடத்தை ஒழித்துக் கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
BJPCongressElection2024IndiaParlimentary ElectionPM ModiRahul gandhiSchool of Corruption
Advertisement
Next Article