For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மீண்டும் தமிழ்நாடு வருகிறாரா பிரதமர் மோடி?

08:57 PM May 27, 2024 IST | Web Editor
மீண்டும் தமிழ்நாடு வருகிறாரா பிரதமர் மோடி
Advertisement

மக்களவைத் தேர்தல் நிறைவடைய உள்ள நிலையில், மே 30,31, ஜூ1 ஆகிய 3 நாட்களில்   பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58) நடைபெற்றது.

இதையடுத்து, 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள் : I.N.D.I.A. கூட்டணியின் பிரதமர் யார்? – ஜூன் 1ம் தேதி ஆலோசனை கூட்டம்!

மக்களவைத் தேர்தல் குறித்த தகவல் வெளியானது முதல் ஏப்ரல் மாதம் வரை ஏழுக்கு மேற்பட்ட முறை தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும், மே 30,31, ஜூ1 ஆகிய 3 நாட்களில் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவின் போது பிரதமர் மோடி இமயமலைக்கு சென்று தியானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement