For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிக மகசூல் தரும் 109 புதிய பயிர் ரகங்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி!

06:00 PM Aug 11, 2024 IST | Web Editor
அதிக மகசூல் தரும் 109 புதிய பயிர் ரகங்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி
Advertisement

அதிக மகசூல் தரக் கூடிய 109 புதிய பயிா் ரகங்களை பிரதமா் நரேந்திர மோடி இன்று (ஆக.11) அறிமுகப்படுத்தினார்.

Advertisement

டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி 34 களப் பயிர்கள் மற்றும் 27 தோட்டப் பயிர்கள் உள்பட 109 ரகங்களை அறிமுகம் செய்தார். அப்போது, விவசாயிகள் மற்றும் ஆராய்சியாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். தொடர்ந்து, அவர் விளைநிலங்களையும் பார்வையிட்டார்.

இன்று அறிமுகம் செய்யப்பட்ட 109 ரகங்களில் களப் பயிர்களில் சிறுதானியங்கள், தீவனப்பயிர்கள், எண்ணெய்வித்துகள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி உள்ளிட்டவற்றின் புதிய ரகங்களும், தோட்டக்கலைப் பயிர்களில் பழங்கள், காய்கறிகள், சணல், மூலிகைப் பயிர்கள் உள்ளிட்டவை அடங்கும்.

இந்தப் புதிய பயிர் வகைகளின் முக்கியத்துவம் குறித்து விவாதித்த பிரதமர் மோடி, வேளாண்மையில் மதிப்புக் கூட்டுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்தப் புதிய ரகங்கள் அதிக நன்மை பயக்கும் என்றும், அவை தங்கள் செலவைக் குறைக்க உதவும் என்றும், சுற்றுச்சூழலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags :
Advertisement