பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வந்த பிரதமர் மோடி பெங்களூரு சிட்டி ரயில் நிலயத்தில் 3 வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெங்களூரு - பெலகாவி, அமிர்தசரஸ் - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, நாக்பூர் (அஜ்னி) - புனே ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையையும் பிரேதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெங்களூருவில் 76 கிலோ மீட்டர் தூரத்துக்கு, சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரை ஊதா நிறப்பாதை, சில்க் நிறுவனத்தில் இருந்து மாதவரா வரை பசுமை நிறப்பாதை ஆகியவற்றில் மெட்ரோ இயங்கி வருகிறது.
இந்நிலையில் ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மஞ்சள் நிற மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதையில் பிரதமர் மோடி பச்சை கொடி அசைக்க இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.
இதை தொடர்ந்து ஜே.பி.நகர் 4-வது பிளாக் முதல் கடபுகெரே வரையிலான 3ஆம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் மோடி, மதியம் 3 மணியளவில் மீண்டும் டெல்லிக்கு தனது தனி விமானத்தில் திரும்புவார். அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரதமர் மோடி பிற்பகல் 3 மணியளவில் டெல்லிக்கு புறப்படுகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.