போர் கப்பல்களை நாட்டுக்காக அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
77வது ராணுவ தினமான இன்று (ஜன.15) அதிநவீன வசதி கொண்ட INS Surat மற்றும் INS Nilgiris ஆகிய போர்க் கப்பல்களுடன் சேர்ந்து INS Vagsheer என்ற நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்காக அர்பணிக்கவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் அம்மூன்று கப்பல்களையும் இயக்கி வைப்பதற்கான நிகழ்ச்சி மோடி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கப்பல்களை இயக்கி வைத்த அவர் மூன்று கடற்படை வீரர்களை பணியமர்த்தினார்.
அதன் பிறகு அவர் பேசியபோது, “பணியமர்த்தப்பட்ட மூன்று வீரர்கள் இந்தியாவில் உருவானது பெருமைக்குரிய விஷயம். 21 ஆம் நூற்றாண்டின் கடற்படையை வலுப்படுத்தும் நோக்கில் நாங்கள் மிக பெரிய அடி எடுத்து வைக்கிறோம். கடந்த சில மாதங்களில், நமது கடற்படை நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள தேசிய மற்றும் சர்வதேச சரக்குகளைப் பாதுகாத்துள்ளது. இந்தியக் கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் மீதான இந்த நம்பிக்கை இன்று அதிகரித்துள்ளது ” என்றார்.