Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சமூக நீதிக்கு இலக்கணமாக பிரதமர் மோடி, ராமதாஸ் திகழ்கின்றனர் - மத்திய அமைச்சர் எல்.முருகன்!

01:59 PM Mar 19, 2024 IST | Web Editor
Advertisement

சமூக நீதிக்கு இலக்கணமாக பிரதமர் மோடி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் திகழ்கின்றனர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement

பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சேலம் வந்தார். பொதுக்கூட்ட மேடைக்கு திறந்தவெளி வாகனத்தில் வந்த மோடி,  தொண்டர்களிடம் கையசைத்தார்.  இன்றைய பொதுக்கூட்ட மேடையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாமக நிறுவனர் ராமதாஸ்,  தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சரத் குமார்,  இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர்,  இந்திய கல்வி மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், “சமூக நீதிக்கு இலக்கணமாக பிரதமர்  நரேந்திர மோடி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் திகழ்கின்றனர். கடந்த 5 நாட்களாக தென்னிந்தியாவை இணைக்கும் விதமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என தென்னிந்தியா முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்துள்ளார்” என தெரித்தார். 
Tags :
AnnamalaiBJPElection2024L MuruganLoksabha Elections 2024Narendra modiNews7Tamilnews7TamilUpdatesParliament Election 2024PMO IndiaSalemTamilNadu
Advertisement
Next Article