செல்போன், மின் வாகனங்கள் விலை குறைகிறது – பட்ஜெட்டில் வெளியான இனிப்பான அறிவிப்பு!
நாடாளுமன்றத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில், நாடாளுமன்றத்தில், மத்திய பட்ஜெட் 2025-ஐ தாக்கல் செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : “ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை” – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
இதன்பின்னர் பேசிய பிரதமர் மோடி, பொதுமக்களை மனதில் கொண்டு பட்ஜெட் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டானது ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கம் கொண்டது என்றார்.
இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவையில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர், லித்தியம் பேட்டரிகளுக்கான வரி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதன் காரணமாக செல்போன் மற்றும் மின் வாகனங்களுக்கான விலை குறைய வாய்ப்புள்ளது.