இலங்கையில் 2024ல் இறுதிக்குள் அதிபர் தேர்தல் - அதிபர் ரணில் விக்கிரமசிங்க!
இலங்கையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கின் பதவிக்காலம் இந்தாண்டு முடிவு பெற உள்ளது. இந்நிலையில், இலங்கையில் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : அரபு வசந்தமும் சமூக வலைதளங்களால் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும்!
இது தொடர்பாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தாவது :
"அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். அந்தத் தேர்தல் நவம்பர் மாத மத்தியில் நடத்தப்படவேண்டும்.
நாடாளுமன்றத்தின் பணக்காலம் 2025 ஆம் ஆண்டு தான் முடிகிறது என்பதால் அந்த ஆண்டில் தான் புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்படவேண்டும். ஆனால், அதிபர் விரும்பினால் முன்கூட்டியே நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்தலாம் என்ற நிலையில், அதிபர் தேர்தலுடன் சேர்த்து நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்படும் என்று ஊகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இது தவறான தகவல், இந்த ஆண்டில் அதிபர் தேர்தல் மட்டுமே நடைபெறும்"
இவ்வாறு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.