For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முதன்முறையாக அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும் குடியரசுத் தலைவர் - ஏற்பாடுகள் தீவிரம்!

01:49 PM May 01, 2024 IST | Web Editor
முதன்முறையாக அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும் குடியரசுத் தலைவர்   ஏற்பாடுகள் தீவிரம்
Advertisement

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதன்முறையாக இன்று அயோத்தி ராமர் கோயிலுக்கு பயணம் மெற்கொள்கிறார்.  இதனையடுத்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

Advertisement

உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலில்  கடந்த ஜன.22-ஆம் தேதி மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து,  இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.  இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதன்முறையாக இன்று அயோத்தி ராமர் கோயிலுக்கு பயணம் மெற்கொள்கிறார்.

அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  "குடியரசுத் தலைவர், ஸ்ரீ ஹனுமான் கர்ஹி கோயில்,  பிரபு ஸ்ரீ ராமர் கோயில் மற்றும் குபேர் டீலாவில் தரிசனமும், சரயு பூஜை மற்றும் ஆரத்தியும் செய்வார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக,  அயோத்தி ராமர் கோயிலில் இன்று தரிசனம் செய்த மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

"500 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு பின்னர் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.  இங்கு உலகம் முழுவதுமிருந்து மக்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.  கோயில் விவகாரத்தில் அரசியல் செய்வோரிடம் அதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

திரௌபதி முர்மு இந்த நாட்டின் குடியரசுத் தலைவரானது எதிர்க் கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை.   காங்கிரஸ் தொடர்ந்து இது தொடர்பான பொய்களைப் பரப்பி வருகிறது.  நமது குடியரசுத் தலைவருக்கும்,  முன்னாள் குடியரசுத் தலைவர்களுக்கு ’பிரான பிரதிஷ்டை’ அழைப்பிதழ் அனுப்பப்பட்டது குறித்து அனைவருக்கும் தெளிவுபடுத்தப்பட்ட போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பொய்கள் அம்பலப்பட்டன” என்றார்.

Tags :
Advertisement