மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் திரைப்படத்தின் பெயர் வெளியீடு!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் திரைப்படத்தின் பெயரை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவாக தயாரிப்பாளர் குணாஜீ இயக்கிய 'காணாம தேடுகிறோம்' என்ற நினைவு பாடல் மற்றும் எம்.எஸ்.பாஸ்கரன் நடிக்கும் திரைப்படத்தின் பெயரை, விஜயகாந்த்தின் நினைவிடத்தில் வெளியிட்டார்.
இந்த பாடலுக்காக கெவின் டிகோஸ்டா இசையமைத்துள்ளார். இசைப்பிரியன் வரிகளை எழுதியுள்ளார். ஜாக் அருணாசலம் இந்த பாடலை தயாரித்துள்ளார். இந்த நிகழ்வில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி, கட்சி நிர்வாகிகள் என ஏராளமான பங்கு பெற்றனர்.
கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:
"தேமுதிக தலைவர் மறைந்து 48 நாட்கள் கடந்துள்ளது. தினந்தோறும் விஜயகாந்த்
நினைவிடத்தில் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. 48-வது நாள் என்பது ஒரு முக்கியமான நாள். 48 நாட்களை ஒரு மண்டலம் என்று கூறுவார்கள். விண்ணுலகத்தில் இருந்து விஜயகாந்த் அனைவரையும் ஆசிர்வாதம் செய்து வருகிறார். நடிகர் பாஸ்கர் அவருடைய திரைப்படத்தின் பெயர் மற்றும் திரைப்பட வெளியீடு தேதி
குறித்து அவருடைய நினைவிடத்தில் வெளியிட வேண்டுமென ஆசைப்படுகிறார்."
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் எம்.எஸ். பாஸ்கர் கூறியதாவது:
"நடிகர் சங்க அடையாள அட்டை வாங்கி கொடுத்தது அண்ணன் விஜயகாந்த் தான். அந்த
அடையாள அட்டையை வைத்து தான் நான் இன்னும் நடிப்புத்துறையில் இருந்து வருகிறேன். என்னுடைய படத்தின் பெயரை அவர் நினைவிடத்தில் வெளியிடுவது நன்றி கடன் செலுத்துவது என்று ஒரு சாதாரண வார்த்தையால் மட்டும் சொல்லமுடியாது.
என்னுடைய இதயத்தை அவருடைய காலில் வைப்பது போல் எனக்கு தோன்றுகிறது. இந்த
திரைப்படத்தின் பெயர் மற்றும் வெளியீடு தேதி விஜயகாந்தின் நினைவிடத்தில்
வைத்து தான் அறிவிக்க வேண்டும் என தயாரிப்பாளரும் நானும் அசைப்பட்டோம்.
இந்த இடத்தில் விஜயகாந்த் ஒரு இறைவனாக காணப்பட்டு வருகிறார். அவருடைய
ஆசிர்வாதத்துடன் நாம் பெரிய பெரிய வெற்றிகளை அடைவோம்."
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்தத் திரைப்படத்தின் பெயர் 'அக்கரன்' என தெரிவித்தார். 'அக்கரன்' என்பதன் பொருள் கடவுள் என்று அர்த்தம் எனவும் தெரிவித்தார். இந்த திரைப்படம் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் எனவும் விஜயகாந்தின் இதயத்தில் இடம் பிடித்தவர் தான் நடிகர் பாஸ்கரன் எனவும் நாங்கள் இரு குடும்பங்களும் ஒரு நட்போடு பழகி வந்தோம் என்றும் தெரிவித்தார்.