பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா? உண்மை என்ன?
This News Fact Checked by 'Newschecker'
பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவிய நிலையில், உண்மை என்ன என்று பார்க்கலாம்.
Claim: பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Fact: இத்தகவல் தவறானது என்று பிரசாந்த் கிஷோர் தரப்பும், பாஜக தரப்பும் தெளிவுபடுத்தியுள்ளன.
பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
Fact Check/Verification:
பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இதுக்குறித்து தேடப்பட்டது.
இத்தேடலில் செய்தி வெளியீடு பகுதியில் இதுக்குறித்த எந்த செய்தியும் காணப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து பாஜக செய்தி தொடர்பாளர்கள் பக்கத்தில் ஆய்வு செய்கையில் அனில் பலூனி என்பவர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவும் இந்த தகவல் பொய்யானது என்று தெளிவுபடுத்தினார்.
இதனையடுத்து தேடுகையில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் இந்த அறிக்கை போலியானது என்றும், இந்த அறிக்கையை காங்கிரஸ் கட்சி பரப்புவதாக குற்றம் சாட்டியும் பதிவு ஒன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளதாக பரவும் அறிக்கை போலியானது என்பது தெளிவாகின்றது.
Conclusion
பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும். இந்த தகவலை பாஜக தரப்பும் பிரசாந்த் கிஷோர் தரப்பும் உறுதி செய்துள்ளன.
Note : This story was originally published by ‘Newschecker’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.
(இந்த செய்தியானது நியூஸ்செக்கர் பெங்காலியில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது).