For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாலியல் புகாரில் கைதான எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

06:19 PM May 31, 2024 IST | Web Editor
பாலியல் புகாரில் கைதான எம் பி  பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
Advertisement

பாலியல் புகாரில் கைதான எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு 2 வது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது. அதன்படி, பிரஜ்வல் ரேவண்ணாவைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர். இதற்கிடையே, பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வந்து சரணடைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணா மே 31-ம் தேதி எஸ்.ஐ.டி. முன்பு ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று வீடியோ ஒன்றை மே 27ம் தேதி வெளியிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள் : வாரணாசியில் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் – நியூஸ்7 தமிழுக்கு ஆட்சியர் ராஜலிங்கம் பிரத்யேக பேட்டி!

பிரஜ்வல் ரேவண்ணா மே 30ம் தேதி நாடு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியானதால் அவரை  விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்ய கார்நாடக காவல்துறை திட்டமிடப்பட்டிருந்ததது. இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பெங்களூரு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.   சிறப்பு புலனாய்வு குழு 14 நாட்கள் அனுமதி கோரியிருந்த நிலையில் 6 நாட்களுக்கு மட்டும் அனுமதி அளித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
Advertisement