பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதற்கடுத்து, பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அவரது 4-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் துவங்கியது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு டூட் (dude) எனப் பெயரிட்டுள்ளனர். இப்படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர். அதேநேரம், நயன்தாரா தயாரிப்பில் உருவான லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டு படங்களும் ஒரேநேரத்தில் வெளியாவது குறித்து ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்ட நிலையில், லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி திரைப்படம் செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.