பிரதீப் ரங்கநாதனின் ’டியூட்’ பட டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படம் மூலம் இயக்குநாராக அறிமுக பிரதீப், அடுத்தடுத்து கதாநாயகனாக நடித்த ’லவ் டுடே’ மற்றும் ’டிராகன்’ ஆகிய படங்கள் பெரும் வெற்றியடைந்து 100 கோடி கிளப்பில் சேர்ந்தன.
இதனை தொடர்ந்து அவர் இயக்குநர் சுதா கொங்காராவின் துணை இயக்குநர்களில் ஒருவரா கீர்த்தீஷ்வரன் இயக்கத்தில் டியூட் படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக பிரேமலு புகழ் நடிகை மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கும் டியூட் படத்திலிருந்து ’ஊரும் பிளட்’ ’நல்லா இரு போ’ மற்றும் ‘சிங்காரி’ ஆகிய பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ள.
இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.