For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா!

உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் பிரபு தேவா சந்தித்துள்ளார்.
02:36 PM Apr 09, 2025 IST | Web Editor
உ பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா
Advertisement

திரையுலகில் நடன கலைஞராகவும் நடிகராகவும் இயக்குநராகவும் 30 ஆண்டுகளுக்கு மேல் பயணித்து வருபவர் பிரபு தேவா. இவர் நடித்து  தமிழில் அண்மையில் ஜாலிஓ ஜிம்கானா திரைப்படம்வெளியாகி கலவையான  விமர்சனத்தை பெற்றது. இதற்கிடையில்  இவர் தெலுங்கு திரைத்துறை முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் பாபு தயாரிப்பில் அவரது மகன் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள கண்ணப்பா படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

மேலும் அவருடன் இணைந்து அக்‌ஷய் குமார், பிரபு தேவா, சரத் குமார், காஜல் அகர்வால், பிரம்மானந்தம், மதுபாலா, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் படத்தில் நடித்துள்ளனர். முகேஷ் குமார் சிங் இயக்கும் இப்படம் வருகிற மே இறுதியில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கண்ணப்பா படக்குழுவினர் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி  ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். படக்குழவினருடன் லக்னோ சென்ற பிரபு தேவா அங்குள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் யோகி  ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றதோடு அவரிடம் இருந்து நினைவுப் பரிசுகைளை பெற்றுச் சென்றார்.

Tags :
Advertisement