For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவு

03:03 PM Nov 14, 2023 IST | Student Reporter
இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்   ரிக்டர் அளவுகோலில் 6 2ஆக பதிவு
Advertisement

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது.

இலங்கையில்  இன்று நண்பகல் 12.31 மணியளவில் 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  இலங்கையின் தலைநகரான கொழும்புவில்  இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இலங்கையில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

“ கொழும்புவுக்கு தென்கிழக்கே 1326 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் மதியம் 12.31 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதால் இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் மற்றும் மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement