10-வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்து கொண்ட கல்லூரி மாணவர்!
பொத்தேரியில் தனியார் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவர் 10-வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை அசோக் நகர், 69-வது தெருவை சேர்ந்தவர் ரகுராம். இவரது மகன் கோகுல்ராம்(20). இவர் செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பொறியியல் கம்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த கல்லூரி 11 அடுக்குமாடியை கொண்டது. இந்த கல்லூரி வளாகத்தில் வழக்கம் போல் தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில் தேர்வு எழுதும் போது கோகுல்ராம் காப்பியடித்தும், துண்டு சீட்டுகளில் விடையை எழுதிவைத்தும் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. அதற்காக பேராசிரியர்கள் கோகுல்ராமை சக மாணவ, மாணவிகள் மத்தியில் கண்டித்ததாக தெரிகிறது. சக மாணவிகள் மத்தியில் கண்டித்ததை அவமானமாக நினைத்த கோகுல்ராம் மன உளச்சலோடு தேர்வு அறையிலிருந்து வெளியே வந்த சற்று நேரத்தில் 10-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
இதையும் படியுங்கள்: துப்பாக்கி முனையில் திருமணம் – அரசு வேலையில் உள்ள இளைஞர்களுக்கு வலைவீச்சு.!
இதில் கோகுல்ராம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டதும் கல்லூரியில் உள்ள சக மாணவ, மாணவிகள் திரண்டு வந்து அலறி கூச்சலிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி குற்றவியல் காவல் ஆய்வாளர் ஆனந்ததாண்டவம் மற்றும் போலீசார் சம்பவ கோகுல்ராமின் சடலத்தை கைப்பற்றினர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பையும் சக மாணவ, மாணவிகள் மத்தியில் கடும் சோகத்தையும் ஏற்படுத்தியது.