Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பிரபல அமெரிக்க கார்ட்டூனிஸ்டான பென் கேரிசன் கார்ட்டூன் வரைந்தார் என பரவும் படம் போலியானது - உண்மை என்ன?

10:33 AM May 29, 2024 IST | Web Editor
Advertisement

This news fact checked by Logically Facts

Advertisement

இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு எதிராக  அமெரிக்காவைச் சார்ந்த பிரபல கார்ட்டூனிஸ்ட்டான பென் கேரிசன்   கார்ட்டூன் ஒன்றை வரைந்துள்ளதாக  சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதன் உண்மைத் தன்மை குறித்து Logically Facts செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம்.

காங்கிரஸ் கட்சியை விமர்சித்து கார்ட்டூன்

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58) நடைபெற்றது.

இதையடுத்து, 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது.  அதன்படி உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாபில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரில் ஒரு தொகுதியிலும் என மக்களவைத் தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 904 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து கார்ட்டூன் ஒன்று வைரலாக பரவியது. மேலும் அந்த கார்ட்டூனை பிரபல அமெரிக்க கார்ட்டூனிஸ்டான பென் கேரிசன் வரைந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் பரப்பினர். அந்த கார்ட்டூனில் இந்திய வரைபடம் வடிவிலான ஒரு இலையை பசுமாடு ஒன்று திண்பது போலவும் அதன்மூலம் கிடைக்கு பாலை காங்கிரஸ் குடும்பத்தினருக்கு சென்று விடுதாகவும் பசுமாட்டின் கழிவுகளான சாணம் மட்டும் இந்திய மக்களுக்கு மிச்சம் எனவும் அந்த கார்ட்டூன் வரையப்பட்டிருந்தது.

அமெரிக்க கார்ட்டூனிஸ்டான பென் கேரிசன் காங்கிரஸை கட்சியை விமர்சித்துள்ளாரா?

பென் கேரிசன் வரைந்ததாக சமூக வலைதளங்களில் வைரலான படம் குறித்து Logically Facts உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது.  இதற்காக சம்பத்தப்பட்ட போஸ்டின் கமெண்டுகளில் தேடியபோது  பல பயனர்கள் இப்படம் தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும் பென் கேரிசனால் உருவாக்கப்பட்ட படம் அல்ல என்றும் தெரிவித்திருந்தனர்.

மேலும் இந்த பதிவின் கீ வேர்டுகளை பயன்படுத்தி தேடுதலுக்கு உட்படுத்தியபோது 2017 ஆம் ஆண்டு பென் கேரிசன் இந்திய அரசியல் குறித்த  எந்த கார்ட்டூன்களையும் தான்  உருவாக்கவில்லை என அவரே தனது சமூக வலைதள பக்கத்தில்  எழுதியிருந்ததை காண முடிந்தது. அதில் அவர் ” நான் இந்திய அரசியல் குறித்து எந்த கார்ட்டூன்களையும் வரைந்ததில்லை. எனது பெயரில் சில கார்ட்டூன்கள் பரவுகிறது.  அவை என்னுடையது அல்ல ” என அப்பதிவில் அவர் விளக்கியிருந்தார்.

வைரல் கார்ட்டூனை வரைந்தது யார்?

சமூக வலைதளங்களில் வைரலான படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச்  தேடலுக்கு உட்படுத்தியபோது அந்த கார்ட்டூன் சமூக வலைதளங்களில் நீண்ட நாட்களாகப் பரவி வருவதைக் Logically Facts கண்டறிந்தது.  2021 ஆம் ஆண்டில் வைரலான அதே படத்தை ஒரு பயனர் பதிவிட்டு இவை மார்ஃபிங் செய்யப்பட்டதாக எழுதியிருந்தார்.  அந்த பயனரின் கூற்றுப்படி உண்மையான  கார்ட்டூன் 2015 இல் இந்திய கார்ட்டூனிஸ்ட் அமல் மேதியால் பகிரப்பட்டது என்றும் அது மத்திய அரசை விமர்சனம் செய்யும் வகையில் வரையப்பட்டது என்றும் தெரியவந்தது.  மேலும் அந்த கார்ட்டூனில் அமல் மேதியின் கையொப்பத்தைக் கண்டறிய முடிந்தது.

அமல் மேதி அஸ்ஸாமைச் சேர்ந்த ஒரு இந்திய கார்ட்டூனிஸ்ட் ஆவார்.  இது தொடர்பாக Logically Facts அமல் மேதியை தொடர்பு கொண்டு பேசியது. இதற்கு அவர் அளித்த பதிலில் “ஆம், நான் 2015 இல் இந்த கார்ட்டூனை உருவாக்கினேன். அந்த படம் எனது முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது. எனது கார்ட்டூனை சிலர் போட்டோஷாப் செய்துள்ளனர் என்பதை முன்பே தெளிவுபடுத்தியுள்ளேன். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நான் வைரலான கார்ட்டூனை உருவாக்கவில்லை.” என தெரிவித்தார்

மேலும் அவர் வரைந்த உண்மையான கார்ட்டூனை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதன் லிங்க் மற்றும் ஸ்கிரீன் ஷாட்டையும் Logically Facts  அனுப்பினார்.  அதன்படி உண்மையான கார்ட்டூனில் காங்கிரஸின் சின்னம் பொறிக்கப்படவில்லை மாறாக  “மேக் இன் இந்தியா” என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளது. மேக் இந்தியா திட்டத்தின் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளார்கள் பயன்பெறுகிறார்கள். இந்திய மக்களுக்கு வெறும் மாட்டின் கழிவுகளான சாணம் மட்டும் மிச்சம் என்று பொருள் கொள்ளும்படி அந்த கார்ட்டூன் வரையப்பட்டிருந்தது.

முடிவு :

அமெரிக்க கார்ட்டூனிஸ்ட்டான பென் கேரிசனின் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து கார்ட்டூன் வரைந்ததாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.  உண்மையான கார்ட்டூன் "மேக் இன் இந்தியா"  திட்டத்தினை குறித்து  விமர்சனம் செய்யும் வகையில் வரையப்பட்டுள்ளது என்பது ஆதாரப்பூர்வமான தகவல்களின் படி உறுதியாகியுள்ளது. மேலும் இந்த கார்ட்டூனை வரைந்தது அமெரிக்க கார்ட்டூனிஸ்டான பென் கேரிசன் அல்ல மாறாக  இந்திய கார்ட்டூனிஸ்ட் அமல் மேதியால் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Note : This story was originally published by Logically Facts and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Ben GarrisonBJPCartoonCongressFact Checkmake in indiaUS Cartoonist
Advertisement
Next Article