’பொன்முடி வழக்குக்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ - அண்ணாமலை பேட்டி!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பொன்முடி வழக்குக்கும் பாஜக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி பயணத்தை மேற்கொண்டர். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மேலும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிடோரை சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்தாக சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
"அமைச்சர் பொன்முடிக்கு தீர்ப்பு வந்திருக்கக் கூடிய தீர்ப்பு என்பது வரவேற்க கூடியது. திமுக பைல் ஒன்னு நாங்கள் விளையாடும் போது பல்வேறு நிறுவனங்களை பற்றி வெளியிட்டிருந்தோம். அந்த நிறுவனங்கள் கூட இந்த அமைச்சர் பொன்முடி வழக்கில் இடம்பெற்றுள்ளன. திமுகவில் 11 அமைச்சர்கள் இதுபோன்ற வழக்குகளில் உள்ளார்கள்.
குறிப்பாக அமைச்சர் பெரியசாமி அவர்கள் மீது 4 வழக்குகள் உள்ளன. துரைமுருகன், கீதா ஜீவன் போன்ற திமுக 11 அமைச்சர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும், யுபிஏ கூட்டணி ஒழிந்ததற்கு காரணமே திமுக தான் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளது. இந்த கூட்டணி பிரச்னை எல்லாத்துக்கும் திமுக தான் காரணம்.
தமிழக அரசு மழை வெள்ளத்தைப் பொறுத்தவரை சரியாக கையாளவில்லை. "
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.