For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பொங்கலோ... பொங்கல்... தமிழர்களால் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழா!

02:23 PM Jan 13, 2024 IST | Web Editor
பொங்கலோ    பொங்கல்    தமிழர்களால் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழா
Advertisement

தமிழர் திருநாளான பொங்கல் விழா,  தமிழ் மக்களால் விமரிசையாக கொண்டாபடும் விழா நாளை தொடங்க உள்ளது.

Advertisement

உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க,  இன்பம் பொங்க என மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் விழா தைத்திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளின் முதல் பண்டிகையாக, போகிப் பண்டிகை தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என நான்கு நாட்களுக்கு விமரிசையாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.

"சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை" என திருக்குறளின் 1031ம் குறளில்,  பல தொழில் செய்தும் சுழலும் இவ்வுலகத்தில் ஏர்ப்பிடிக்கும் தொழிலை பின்பற்றிதான் உலகம் சுற்ற வேண்டியிருக்கிறது. துன்பங்கள் பலயானும் உழவுத் தொழிலே உலகத்தில் சிறந்தது என்பது வள்ளுவன் வாக்கு.

உலக இயக்குதலுக்கு முக்கிய காரணமே,  பேரண்டத்தின் ஒளிவீசிக்கொண்டிருக்கும் சூரியன் தான்.  மனிதனுடைய நாகரிக வளர்ச்சியில் இயற்கையோடு மனிதை தொடர்புப்படுத்தி விஷயம் என்றால் அது விவசாயம் தான்.  மிருகங்களை வேட்டியாடி அதனை பிரதான உணவாக எடுத்துக் கொள்வதுதான் கற்கால மனிதர்களின் முக்கிய உணவாக இருந்தது.  ஆனால் மகப்பேறு காலத்தில் வேட்டைக்கு செல்லமுடியாத பெண்கள், குகைகளில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்ததேபோது, கண்டுபிடித்த மாபெரும் விஷயம் தான் விவசாயம்.  அத்தகைய மாபெரும் சிறப்பு மிக்க விவசாயத்தையும் மற்றும்  விவசாயிகளையும் பெருமைப்படுத்தும் விழாவாக தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கும் போகிப் பண்டிகை!

பொங்கல்  பண்டிகையின் முதல் நாள் போகி பண்டிகை. போகி பண்டிகை மழையின் கடவுள் என்றும் அழைக்கப்படும் இந்திரனைக் கொண்டாடும் விதமாக கொண்டாடப்படுகிறது.  இந்திரன் நிலத்திற்கு செழிப்பையும் மகிழ்ச்சியையும் தருவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகளால் வணங்கப்படுகிறார். மேலும், நாட்டில் உள்ள விவசாயிகள் நல்ல விளைச்சலைப் பெறவும் அதன் மூலம் செல்வத்தையும் செழிப்பையும் கொண்டு வர இந்திரனை வழிபடுகின்றனர். அவர்கள் தங்கள் கலப்பை மற்றும் பிற விவசாய உபகரணங்களையும் இந்த நாளில் வணங்குகிறார்கள்.

பழையன கழிதலும்,  புதியன புகுதலுமே போகியின் தத்துவமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.  "வங்கக்கடல் கடைந்த மாதவனை" என்று தொடங்கும்  திருப்பாவையின் முப்பதாவது பாடலுக்குரிய நாள் போகிப் பண்டிகை.

பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள்.  அப்போது தேவையற்ற பழைய பொருள்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள்.  போகியன்று அந்தப் பழைய பொருள்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம்.  அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.  இவ்வாறாகப் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இந்தப் போகிப் பண்டிகை அமைந்திருக்கும்.  போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும்.  அன்றைய தினம், வீட்டில் தேங்கிப்போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.  வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

தை பொங்கல் வந்தாச்சு..!

பொங்கல் என்பதற்கு பொங்கி வழிதல் பொங்குதல்’ என்பது பொருள். அதாவது புதிய பானையில்,  புத்தரிசியிட்டு,  அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து வரும்.  அதுபோல, தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்பது நம்பிக்கை.

தைப் பொங்கல் செழிப்பைக் குறிக்கிறது. மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புது ஆடைகள் அணிந்து சூரியபகவானை வழிபடுவார்கள். உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தை பொங்கல் மிக முக்கியமான நாள். கிராமப்புறங்களில் மக்கள் இந்த தை பொங்கலை திறந்த வெளியில் அல்லது தங்கள் வீட்டின் முற்றத்தில் கொண்டாடுவார்கள். மஞ்சள் மற்றும் குங்குமம் தடவிய பாத்திரத்தில் புதிய மஞ்சள் இலைகள் கட்டிய பாத்திரத்தில்  பொங்கலை செய்வார்கள்.

நன்றி தெரிவிக்கும் மாட்டுப்பொங்கல்:

இயற்கையை தெய்வமாக வழிபடும் பழக்கம் நம்மிடம் காலம் காலமாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் உழவு தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தி, வழிபடும் நாளாக தை முதல் நாளை பொங்கல் பண்டிகையாக கொண்டாடுகிறோம்.

இயற்கைக்கு அடுத்த படியாக உழவு தொழிலுக்கு விவசாயிக்கு உற்ற துணையாக இருக்கும் மாடுகளுக்கும் நன்றி செலுத்தி, கெரளவிக்கும் நாளாக பொங்கல் பண்டிகையின் 2ம் நாளில் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம். நகரப் பகுதிகளில் பொங்கல் திருநாளன்று மட்டும் வீடுகளில் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் கிராமப்புறங்களில் தற்போதும் பொங்கல், மாட்டுப் பொங்கல் இரண்டு நாட்களுமே பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. பொங்கலன்று வீட்டின் வாசலிலும், மாட்டுப் பொங்கலன்று மாட்டுத் தொழுவத்திலும் பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளது.

காணும் பொங்கல்

தமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களின் நான்காவது மற்றும் கடைசி நாள் தான் காணும் பொங்கல். காணும் பொங்கலுக்கு கன்னிப் பொங்கல், கணுப் பண்டிகை என்கிற பெயர்களும் உண்டு. கன்னிப்பொங்கல் என்கிற பெயரிலேயே விளக்கம் ஒளிந்திருப்பதை அறிய முடிகிறது. காணும் பொங்கல் அன்று உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரை சந்தித்து மகிழ்வர்.

Tags :
Advertisement