For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது" - ராகுல் காந்தி!

04:29 PM May 18, 2024 IST | Web Editor
 அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது    ராகுல் காந்தி
Advertisement

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், பிரியங்காவும் காரில் பயணித்தபடியே தங்கள் குழந்தைப் பருவ நிகழ்வுகளை நினைவுகூர்ந்து வித்தியாசமாக வாக்கு சேகரித்தனர்.

Advertisement

இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

5ம் கட்ட வாக்குப்பதிவு மே 20-ம் தேதியும், 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும், 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுத்தாக்கல் செய்ய மே-14 ஆம் தேதி இறுதி நாள் என்பதால், ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் போட்டியிடுவோர் மே – 14ம் தேதி மனுத்தாக்கல் செய்தனர்.

மக்களவை 5-ஆம் கட்டத் தேர்தலையொட்டி, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி, லக்னோ உள்பட 49 தொகுதிகளில் இன்றுடன்  பிரசாரம் நிறைவடைகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வயநாட்டை தொடர்ந்து ரேபரேலியிலும் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அரசியலில் சிறுவயதிலிருந்தே ஆழ்ந்த உறவு தனக்கும் பிரியங்கா காந்திக்கும் இருந்து வருவதாகவும், ஆனால் தங்கள் இருவரின் உறவுக்கிடையே எப்போதும் அரசியல் புகுந்தது இல்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :

"ரேபரேலியில் தானும், தமது சகோதரி பிரியங்கா காந்தியும் குழந்தைப் பருவத்தில் சுற்றித் திரிந்த தெருக்களில் இப்போதும் சிறிது நேரம் உலாவியதாக குறிப்பிட்டு பற்பல இனிமையான நினைவலைகளை உள்ளது.  குறிப்பாக, தங்களுடைய பாட்டி (முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின்) ஞானம், தந்தைக்கு பிடித்த இனிப்புகள், பிரியங்கா காந்தி கேக்குகளை உருவாக்கிய கொடுப்பார்.

இதையும் படியுங்கள் : ராமர் கோயில் குறித்த பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை!

இந்தியாவின் முன்னேற்றத்திற்கும்,நாட்டை வழிகாட்டுவதிலும் ரேபரேலிக்கு முக்கிய பங்கு உள்ளது. நெடுங்காலமாக உத்தரபிரதேசத்தின் அரசியல், சித்தாந்த மையமாக ரேபரேலி திகழ்கிறது. நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் வழிகாட்டியதும் ரேபரேலி தான். ரேபரேலி நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி காட்ட வேண்டும். மேலும், அரசியல் சேவையாற்றுவோர், தங்கள் குடும்பத்தை மதிக்கவில்லையெனில், குடும்பத்துடன் சுமூகமான உறவை தொடர முடியவில்லையெனில், குடும்பத்திற்கு வெளியிலும் நல்லுறவைப் பேண முடியாது. அன்றாட வாழ்க்கையில் நீங்கள் பொய் சொன்னால், அரசியலிலும் பொய்களை உரைப்பீர்கள்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

https://x.com/RahulGandhi/status/1791676367009989099

Tags :
Advertisement