For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டோக்கன் பெறாதவர்களுக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் சிறப்பு தொகுப்பு எப்போது? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு...

01:38 PM Jan 10, 2024 IST | Web Editor
டோக்கன் பெறாதவர்களுக்கு ரூ 1000 மற்றும் பொங்கல் சிறப்பு தொகுப்பு எப்போது  தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
Advertisement

டோக்கன்களை பெற தவறிய அரிசி குடும்ப அட்டைதாரர்கள் ஜனவரி 13 மற்றும் 14-ம் தேதிகளில் அவர்களின் நியாய விலை கடைகளில் 1000 ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு முன்னதாக அறிவித்தது. மேலும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. மத்திய மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக ரேசன் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. எனவே, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பரிசாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்துள்ளது.

இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்திற்காக கடந்த ஜனவரி 7-ம் தேதி முதல் ஜனவரி 9-ம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்பட்டன. மேலும், இன்று (ஜன.10) முதல் ஜன.13-ம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.  மேலும் பொங்கல் தொகுப்பை 13-ம் தேதிக்குள் பெற முடியாதவர்கள் 14-ம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டோக்கன் கிடைக்கப்பெறாத அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகையை ஜனவரி 13 மற்றும் 14-ம் தேதிகளில் அவர்களின் நியாய விலை கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags :
Advertisement