For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மன்னர் கோலியாத்தின் மொபைல் ஃபோன் என வைரலாகும் படங்கள் உண்மையா?

09:44 PM Nov 22, 2024 IST | Web Editor
மன்னர் கோலியாத்தின் மொபைல் ஃபோன் என வைரலாகும் படங்கள் உண்மையா
Advertisement

This News Fact Checked by ‘Factly

Advertisement

விவிலியப் பாத்திரமான கிங் கோலியாத்தின் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்டமான மொபைல் ஃபோன் என மூன்று படங்களின் தொகுப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மையை சரிபார்க்கலாம்.

பிரமாண்டமான மொபைல் ஃபோனைக் கொண்ட மூன்று படங்களின் தொகுப்பு (இங்கே, இங்கே மற்றும் இங்கே) சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது விவிலியப் பாத்திரமான கிங் கோலியாத்தின் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சில மனிதர்கள் வேலை செய்வதையும் படங்கள் காட்டுகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

வைரல் பதிவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க, இது தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி இணையத்தில் தேடப்பட்டது. கோலியாத் மன்னரின் கல்லறையில் பிரமாண்டமான கைத்தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தேடுதலில் நம்பகமான செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை. முக்கிய ஊடகங்கள் நிச்சயமாக இதுபோன்ற செய்திகள் ஒலிபரப்பப்பட்டிருக்கும். ஆனால் இந்த விஷயத்தில் இதுபோன்ற எதுவும் கண்டுபிடிக்கவில்லை.

வைரல் பதிவில் உள்ள புகைப்படங்களை உன்னிப்பாகக் கவனித்தபோது, ​​செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படங்களில் பொதுவான சில முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. இந்தப் படங்களில் உள்ளவர்களின் முகங்கள் சிதைந்து காணப்படுகின்றன. கைகளில் உள்ள விரல்கள் நீளமாகத் தெரிகின்றன. சில சமயங்களில் சில விரல்கள் முழுமையடையாமல் இருக்கின்றன. எனவே, படங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், சரிபார்ப்பு செயல்முறை தொடங்கப்பட்டது.

இந்தப் படங்களை பகுப்பாய்வு செய்ய, ஹைவ் மாடரேஷன் எனப்படும் ஆன்லைன் AI உள்ளடக்கத்தைக் கண்டறியும் கருவி மூலம் அவை இயக்கப்பட்டது. இந்த பகுப்பாய்வின் முடிவுகள், AI ஐப் பயன்படுத்தி இந்த படங்கள் உருவாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு 73.3% என்று தெரிவித்தது.

'சைட் எஞ்சின்' செயலியிலும் படங்களும் சரிபாக்கப்பட்டன. அதில் படங்கள் 99% AI ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என தெளிவானது. கூடுதலாக, ட்ரூ மீடியாவின் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இது படங்களில் கையாளுதலுக்கான கணிசமான ஆதாரங்களைக் கண்டறிந்தது.

மேலும், விவிலிய பாத்திரமான கோலியாத் பெலிஸ்திய பழங்குடியினரைச் சேர்ந்த ஒரு பெரியவர். 2016-ம் ஆண்டில், தெற்கு இஸ்ரேலில் 3000 ஆண்டுகள் பழமையான பிலிஸ்டைன் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டதாக CNN செய்தி வெளியிட்டது. இன்றுவரை, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மொபைல் போன் (1973 இல் கண்டுபிடிக்கப்பட்டது) போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளை இந்த தளத்தில் கண்டுபிடித்ததாக எந்த செய்தியும் இல்லை.

முடிவு:

AI உதவியுடன் உருவாக்கப்பட்ட படங்கள் கோலியாத்தின் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட அவரது மொபைல் ஃபோனின் காட்சிகள் என தவறாகப் பகிரப்படுகின்றன.

Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement