For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பொங்கலை பண்டிகை: முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை!

10:20 AM Jan 10, 2024 IST | Web Editor
பொங்கலை பண்டிகை  முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை
Advertisement

பொங்கல் பண்டிகையை ஒட்டி, அனைத்து பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்  மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே இன்று வரவு வைக்கப்பட்டது.  ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி ரூ.1,000 வரவு வைக்கப்படும் நிலையில், இம்மாதம் 10-ம் தேதியே வரவு வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இதையடுத்து ஒவ்வொரு மாதமும் உரிமைத் தொகை அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இந்த மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்:  உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை ரத்து!

1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு முதல்கட்டமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்ட நிலையில்,  இரண்டாம் கட்டமாக நவம்பர் மாதம் 7.35 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது.   தற்போது 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் நிலையில்,  இந்த மாதம் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே இன்று வரவு வைக்கப்பட்டது.  ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி ரூ.1,000 வரவு வைக்கப்படும் நிலையில், இம்மாதம் 10-ம் தேதியே வரவு வைக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement