'அரசியல் கடினம்; படத்தில் நடிப்பது எளிது...' - கங்கனா ரனாவத் ஓபன் ஸ்டேட்மண்ட்!
ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடிகையும் பா.ஜ.க எம்.பியுமான கங்கனா ராணாவத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியிருப்பதாவது, “கேங்ஸ்டர் திரைப்படம் வெளியானவுடன் அரசியலில் இணைய என்னை அணுகினார்கள். எனது கொள்ளு தாத்தா 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். இது போன்ற குடும்பத்தில் இருந்து பிரபலமடையும் பொழுது அரசியல் தலைவர்கள் அணுகுவது வழக்கம்.
ஆசிட் தாக்குதலில் இருந்து உயிர் தப்பிக்க எனது சகோதரி உள்ளிட்டோருக்கும் அரசியலில் இணைய வாய்ப்பு அளித்தனர். அரசியல் கட்சிகள் எங்களை அணுகுவதும் வாய்ப்பு கிடைப்பதும் பெரிய விஷயம் கிடையாது. நான் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகளை சந்தித்திருக்க வேண்டியதில்லை.
சினிமா துறையில் நடிகை, இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கிறேன். அரசியல் வாழ்க்கையில் மக்களுடன் என்னை தொடர்பு படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் எந்தவித நிர்பந்தமும் இன்றி நான் முன்னேறி செல்வேன்.
அரசியலை விட படத்தில் நடிப்பது எளிதானது என்பதை நான் மறுக்க மாட்டேன். மருத்துவர்கள் போல இதுவும் கடினமான வாழ்க்கை. பிரச்சனை உள்ளவர்கள் மட்டுமே அரசியல்வாதிகளை பார்க்க வருவார்கள். படம் பார்க்க போனால் நிம்மதி கிடைக்கும் ஆனால் அரசியல் அப்படி கிடையாது” என தெரிவித்துள்ளார்.