For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஜய்யின் #TheGoat திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் குறியீடுகள் என்னென்ன?

10:15 AM Sep 05, 2024 IST | Web Editor
விஜய்யின்  thegoat திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் குறியீடுகள் என்னென்ன
Advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள தி கோட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் குறியீடுகள் குறித்து காணலாம்...

Advertisement

‘லியோ’ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு  இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இது விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் படமாகும். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

இந்த திரைப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கி எல்லா காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாகி வருகின்றன. பொதுவாக வெங்கட் பிரபு படம் என்றாலே அதில் நாம் பிரேம்ஜியை பார்க்காமல் இருக்க முடியாது. அந்த வகையில் தி கோட் படத்திலும் பிரேம்ஜி நடித்துள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றியும் படம் குறித்தும் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் பிரேம்ஜி.

விஜய்க்கு மாமாவாக பிரேம்ஜி

படத்தில் தனது கேரக்டர் பற்றி பேசிய பிரேம்ஜி “மங்காத்தா படத்தின் வெற்றியின் போதே விஜய் எங்கள் எல்லாரையும் அழைத்து அவர் வீட்டில் பார்ட்டி கொடுத்தார். அப்போது நான் அவரிடம் நான் உங்களுடன் ஒரு காட்சியிலாவது திரையில் நடிக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு விஜய். நீ தல ஆளுன்னு எனக்கு தெரியும் . நீ என்னோட படத்துக்கு மியூசிக் பண்ணு என்று சொன்னார். அவர் சொன்னது போலவே தி கோட் படத்தில் நான் ஒரு ரீமிக்ஸ் பாடலுக்கு இசையமைத்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் நான் சினேகாவின் தம்பியாக நடித்திருக்கிறேன். அப்பா விஜய் எனக்கு மாமா. அதே போல் மகன் விஜய் என்னை மாமா என்று அழைப்பார். படத்தில் நான் குறைவான காட்சிகளில் நடித்திருந்தாலும் இரண்டு விஜய்யுடனும் நடித்திருக்கிறேன்.

அரசியல் குறியீடு பற்றி பிரேம்ஜி!

படப்பிடிப்புக்கு நடுவே, விஜய் தனது அரசியல் செயல்பாடுகளையும் இன்னொரு பக்கம் தீவிரப்படுத்தினார். வரும் 2026-ம்  ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவரது தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட இருக்கிறது. இதனால் தி கோட் படத்தில் விஜய்யின் அரசியல் கட்சித் தொடர்பான ரெஃபரன்ஸ் இந்த படத்தில் இருக்குமா? என்று பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அந்த மாதிரியான ஒரு ரெஃபரன்ஸ் இப்படத்தில் இருக்கிறது. தி கோட் படத்தில் விஜய்யின் கார் நம்பர் சி.எம் 2026 என்றிருக்கும். அந்த காருக்குள் நானும் விஜய்யும் இருக்கும் காட்சி உள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் குறியீடு பற்றி வெங்கட்பிரபு!

முதல் பாடலில் பார்டி ஒன்னு தொடங்கட்டுமா என பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, எங்கள் படத்தின் படப்பிடிப்பின் போது தான் விஜய் அரசியலுக்கு வருவதை அறிவித்தார். எங்களால் என்ன செய்ய முடியும் வாழ்த்து மட்டுமே சொல்ல முடியும். அதனால் படத்தில் அங்கங்கு அரசியல் தொடர்பான மேற்கோள்களை வைத்துள்ளோம். ஆனால் விஜய் அண்ணா இது வேண்டும் வேண்டாம் என எதுவும் சொல்லவில்லை. படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமாக இருக்கும் என்றார்.

Tags :
Advertisement