தப்பியோடிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்!
செங்கல்பட்டு மாவட்டம் காத்தான் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் அசோக் (வயது 30). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் மற்றும் 4 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ரவுடி அசோக் சிங்கப்பெருமாள் கோயில் அருகே ஆப்பூர் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையும் படியுங்கள் : பயணிகள் கவனத்திற்கு… ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!
இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அசோக்கை சுற்றி வளைத்தனர். அப்போது, ஏ ப்ளஸ் கேட்டகிரி ரவுடியான அசோக் போலீசாரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்ப முயன்றதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து, போலீசார் தற்காப்பிற்காக அசோக்கின் இடது காலில் சுட்டனர்.
போலீசார் சுட்டதில் படுகாயமடைந்த அசோக் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏ ப்ளஸ் கேட்டகிரி ரவுடியான அசோக்கை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.