For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“காவல்துறையின் மெத்தனப் போக்கு கண்டனத்துக்குரியது!!“ - நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கண்டனம்

11:41 AM Jan 25, 2024 IST | Jeni
“காவல்துறையின் மெத்தனப் போக்கு கண்டனத்துக்குரியது  “   நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கண்டனம்
Advertisement

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

“திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை நிலவுவதாக நேசபிரபு தொடர்ச்சியாக காவல்துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணி நேரங்களுக்கு முன்பே தெரிவித்தும் இந்த திமுக அரசின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் ஏற்கனவே பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவி வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவே இன்று செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலாகும்.இதையும் படியுங்கள் : செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதல் - நியூஸ்7 தமிழ் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

பாதிக்கப்பட்ட செய்தியாளர் நேசப்பிரபு விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடுதிரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதோடு, அவர் குணமடைய உரிய மருத்துவ சிகிச்சை வழங்குமாறும், கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து, பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலையை உறுதிசெய்யுமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஆட்சிக்கு வந்த நாள் முதலே சட்டம் ஒழுங்கை சீர்குலையச் செய்துள்ள காவல்துறையை தன் கையில் வைத்திருப்பதாக சொல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுபோன்ற சம்பவங்கள் இனியாவது நிகழாவண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement