For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிரப்பா? விஷமா? தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்த இருமல் மருந்துகள்!

04:59 PM Jul 26, 2024 IST | Web Editor
சிரப்பா  விஷமா  தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்த இருமல் மருந்துகள்
Advertisement

இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட மருந்து நிறுவனங்கள் இருமல் சிரப்பின் தர சோதனையில் தோல்வியடைந்துள்ளன.

Advertisement

காம்பியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளில் குழந்தைகளின் இறப்புக்குக் காரணமாகக் கூறப்படும் இருமல் சிரப்பில் உள்ள அதே நச்சுதான் இந்த சிரப்புகளிலும் இருப்பதாக மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) அறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய இருமல் சிரப்களால் வெளிநாடுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, புதிய உற்பத்தித் தரங்களைப் பூர்த்தி செய்யுமாறு இந்திய அரசாங்கம் மருந்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியது.

இது தொடர்பான விசாரணை அறிக்கையில், 100 நிறுவனங்களின் இருமல் சிரப்களில் டைதிலீன் கிளைகோல் (டிஇஜி) மற்றும் எத்திலீன் கிளைகோல் (இஜி) இருப்பதால் தரம் இல்லை (என்எஸ்கியூ) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை சுகாதார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, DEG/EG, நுண்ணுயிரியல் வளர்ச்சி, pH அளவு ஆகியவற்றின் அடிப்படையில், இந்த இருமல் சிரப்கள் NSQ என வகைப்படுத்தப்பட்டுள்ளன. CDSCO 7,087 தொகுப்பு மருந்துகளை விசாரணை பிரிவில் வைத்துள்ளது.

இருமல் மருந்துகளில் குறிப்பிட்ட அளவு DEG மற்றும் EG இரசாயனங்கள் சேர்க்கப்படலாம். இதை அதிக அளவில் உட்கொண்டால், சிரப் விஷமாக மாறும்.  2 ஆண்டுகளுக்கு முன்பு, தென்னாப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்திய இருமல் சிரப் குழந்தைகளின் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தியது. இதனால் சுமார் 70 குழந்தைகள் உயிரிழந்தனர்.

Tags :
Advertisement