For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

11:18 AM Feb 14, 2024 IST | Web Editor
இந்தியா   ஐக்கிய அரபு அமீரகம் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
Advertisement

பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அதிபர் முகமது பின் ஜாயேத் அல் நஹ்யானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில்,  இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று ஐக்கிய அரபு அமீரகம் சென்றார்.  அங்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : நெல்லையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 5ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

இந்நிலையில், இருதரப்பு நல்லுரவை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து, இரு நாடுகள் இடையே 8 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

இதையடுத்து, முக்கியத்துவம் வாய்ந்த பரஸ்பர முதலீட்டுக்கான ஒப்பந்தம், விரிவான பொருளாதார கூட்டுறவுக்கான ஒப்பந்தம், எண்ம உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இருநாடுகளின் தேசிய ஆவண காப்பகங்கள் இடையே ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம், பாரம்பரியம் மற்றும் அருங்காட்சியகங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம், இந்தியாவின் இணையவழி பரிவர்த்தனை தளமான யுபிஐ மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பரிவர்த்தனை தளமான ஏஏஎன்ஐ ஆகியவற்றின் இணைப்புக்கான ஒப்பந்தம், இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான 'ரூபே' கடன்-பற்று அட்டைகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் 'ஜேவான்' அட்டைகள் இடையிலான இணைப்புக்கான ஒப்பந்தம் உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement