உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் #PMModi சந்திப்பு!
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றார். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா சென்றார். அங்கு நடைபெற்ற குவாட் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய வம்சாவளியினர், அமெரிக்க வாழ் இந்தியர்களையும் சந்தித்தார். இதனை தொடர்ந்து பயணத்தின் கடைசி நாளான நேற்று பிரதமர் மோடி ஐ.நா. சபையில் உரையாற்றினார்.
இதையும் படியுங்கள் : #GoldRate | புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம்!
இந்த நிகழ்ச்சியின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்தியா தயாராக இருப்பதாக ஜெலன்ஸ்கியிடம் மோடி உறுதியளித்தார். தொடர்ந்து, அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.