குஜராத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய #PMModi..!
பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் எல்லைப் பாதுகாப்பு வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை படை வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், இன்று (அக்.31) குஜராத் மாநிலம் கட்ச் எல்லைப்பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கி, அவர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். அப்போது பிரதமர் மோடி, ராணுவ வீரர்கள் உடையை அணிந்திருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "தீபாவளி பண்டிகையை ஜவான்களுடன் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார். கடந்தாண்டு, ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் சீன எல்லையையொட்டி லெப்சா பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, ராணுவ உடை அணிந்து, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.