தருமபுரி மாவட்டத்தில் அரை நாள் முழு அடைப்புப் போராட்டம்! காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த #PMK கோரிக்கை!
காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக சார்பில் தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று அரை நாள் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பத்தாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் அதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி இன்று (அக்டோபர் 4ம் தேதி) தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த பாமக அழைப்பு விடுத்தது. இது குறித்து விளம்பர பதாகைகளும் துண்டு பிரசுரங்களும் பாமக சார்பில் விநியோகிக்கப்பட்டன.
இதையும் படியுங்கள் :Dindigul | கொலை வழக்கில் தொடர்புடையவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார்!
இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கடையடைப்பு நடைபெற்று வருகிறது. பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பாமக சார்பில் நடத்தப்படும் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினர். மேலும், பேருந்துகள் வழக்கத்தை விட குறைவாக இயக்கப்படுகின்றன.