For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரதமர் மோடியின் சகோதரரின் மனைவி சமீபத்தில் இறந்துவிட்டாரா? நடந்தது என்ன?

10:47 AM May 22, 2024 IST | Web Editor
பிரதமர் மோடியின் சகோதரரின் மனைவி சமீபத்தில் இறந்துவிட்டாரா  நடந்தது என்ன
Advertisement

This News Fact Checked by 'Vishvas News'

Advertisement

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியின் மனைவி சமீபத்தில் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி தவறானவை மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியவை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியின் மனைவி பகவதிபென் மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த பதிவில், பகவதிபென் சமீபத்தில் அகமதாபாத்தில் காலமானதாக கூறப்படுகிறது.

இந்த கூற்றை விஸ்வாஸ் நியூஸ் முன்பு ஒருமுறை ஆய்வு செய்தது. உண்மையில், பிரதமர் மோடியின் சகோதரரின் மனைவி பகவதிபென் 2019-ம் ஆண்டு அகமதாபாத்தில் மாரடைப்பால் காலமானார். சமூக வலைதளங்களில் வைரலான பதிவுகள் தவறானவை.

உண்மை சரிபார்ப்பு:

ஃபேஸ்புக் பயனாளர் ஜகதீஷ் படேல் அவதேஷ், மே 15 அன்று வைரலாகும் புகைப்படத்தை பகிர்ந்து, “பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியின் மனைவி ஸ்ரீமதி.பகவதி பென் மோடி உடல்நலக்குறைவால் நேற்று அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் காலமானார்.  மைத்துனர் பிரதமர், அண்ணி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இப்படிப்பட்ட தேசபக்தியுள்ள குடும்பத்தை எங்கே காணலாம்? இறைவன் அவரது ஆன்மாவிற்கு நித்திய சாந்தியை தரட்டும். ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளார்.

விசாரணை:

இதன் உண்மை தன்மையை ஆய்வு செய்ய, முதலில் 'நரேந்திர மோடியின் மைத்துனி மரணம்' என்ற கீவேர்டை டைப் செய்து கூகுளில் ஓபன் சர்ச் செய்யப்பட்டது. அப்போது பிரதமர் மோடியின் மைத்துனி பகவதி பென் மரணம் குறித்த பல பழைய செய்திகள் கிடைத்தன.

2019-ம் ஆண்டு மே 1-ம் தேதியன்று Patrika.com இணைய பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியின் மனைவி பகவதிபென் காலமானார் என்று பதிவிடப்பட்டிருந்தது. மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக அப்பக்கத்தில் செய்திகள் கூறுகின்றன. மேலும், உடல்நலக்குறைவு காரணமாக அவர் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஏற்கனவே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிற நோய்கள் இருந்ததாகவும், செய்திகள் கூறுகின்றன.

தேடுதலின் போது, ​​Jagran.com பக்கத்தில் 9 மே 2019 அன்று வெளியிடப்பட்ட செய்தி ஒன்று கிடைத்தது. அதில், சடங்குகளுக்குப் பிறகு பகவதி பென்னின் அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்டதாகவும், பிரம்மகுண்டத்தில் தாயின் அஸ்தியை மெகுல் மோடி தகனம் செய்ததாகவும் அந்த செய்திகள் தெரிவித்தன.

முந்தைய விசாரணையின் போது விஸ்வாஸ் நியூஸ் சார்பில் பிரகலாத் மோடியிடம் பேசப்பட்டது. இது குறித்து அவர் அளித்த தகவலில், 2019-ம் ஆண்டிலேயே தனது மனைவி இறந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது.

முடிவு:

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியின் மனைவி பகவதிபென் ஏற்கனவே 2019-ம் ஆண்டு அகமதாபாத்தில் மாரடைப்பால் காலமானார் எனவும், சமூக வலைதளங்களில் வைரலான பதிவுகள் தவறானவை எனவும், தவறாக வழிநடத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Note : This story was originally published byVishvas News’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement