For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பில்கேட்ஸுடன் AI குறித்து உரையாடிய பிரதமர் மோடி!

11:03 AM Mar 29, 2024 IST | Web Editor
பில்கேட்ஸுடன் ai குறித்து உரையாடிய பிரதமர் மோடி
Advertisement

பிரதமர் நரேந்திர மோடிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்க்கும் இடையே சுவாரசியமான உரையாடல் நடந்து முடிந்துள்ளது.

Advertisement

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி,  சுகாதாரம்,  விவசாயம் மற்றும் கல்வி ஆகிய துறைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பில் கேட்ஸ் ஆகியோர் விவாதித்தனர்.  இந்த விவாதத்தின் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் போது,  உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகள் நாட்டில் டிஜிட்டல் புரட்சி குறித்து ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.  நான் அவர்களிடம் பொருளாதாரத்தில் ஏகபோகத்தை தடுக்க தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தியுள்ளோம் என்பதை அவர்களிடம் விளக்கினேன். இது மக்களாலும் மக்களுக்காகவும் தான்.

உலகில் டிஜிட்டல் பிளவு பற்றி நான் கேள்விப்பட்டபோது, ​​ எனது நாட்டில் அப்படி எதுவும் நடக்க அனுமதிக்க மாட்டேன் என்று நினைத்தேன்.  டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஒரு முக்கிய தேவை.  இந்தியாவில் அதிகமான பெண்கள் புதிய தொழில் நுட்பத்தை கடைபிடிக்க தயாராக உள்ளனர்.  நான் ‘நமோ ட்ரோன் திதி’ திட்டத்தை தொடங்கியுள்ளேன் .இது மிகவும் வெற்றிகரமாக நடந்து வருகிறது.

இந்த நாட்களில் நான் அவர்கள் உடன் பழகியது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. பெண்களுக்கு சைக்கிள் ஓட்டக்கூட தெரியாது என்று சிலர் சொன்னார்கள்.  ஆனால் இப்போது அவர்கள் விமானிகள்,  ட்ரோன்க்ள மூலம் அவர்களால் பறக்க முடியும்.  அவர்களது மனநிலை தற்போது மாறிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இந்த விவாதத்தின் போது பில்கேட்ஸ்,  இங்கு டிஜிட்டல் அரசாங்கம் போன்று செயல்படுகிறது.  உண்மையில் இந்தியா தொழில்நுட்பத்தை மாற்றியமைப்பது மட்டுமல்லாமல்,  அது முன்னணயில் உள்ளது என்றார்.

Tags :
Advertisement