எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகை தந்தால் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம் - எம்பி மாணிக்கம் தாகூர்!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகை தந்தால் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம் என விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
விருதுநகர் மக்களவை தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 13.50 லட்சம் மதிப்பீட்டில் மதுரை மேற்கு மண்டலம் 5க்குட்பட்ட 99 வது வார்டு திருமலையூர் பாம்பன் நகர் செல்லும் சாலையில் புதிய ரேஷன் கடை அமைப்பதற்காக பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்த பூமி பூஜையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், உதவி ஆணையர் உதவி செயற்பொறியாளர் மாம் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : விளையாட்டு துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி.மாணிக்கம் தாகூர் கூறியதாவது :
"பாஜக, டெல்லி பத்திரிக்கைகளும் எதிர்பார்த்தது போன்று இல்லாமல், I.N.D.I.A. கூட்டணி இப்போது வெற்றிகாரமான கூட்டணியாக தொடர்கிறது. சமாஜ்வாதியுடன் இடங்கள் பகிரப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. I.N.D.I.A. கூட்டணி தொடர்ந்து பலமான கூட்டணியாக மாறி வருகிறது. 300 இடங்களை கைப்பற்றும் என்பது எந்த மாற்றமும் இல்லை, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் வெடித்திருக்கிறது. மோடியுடைய ஆட்சி இளைஞருக்கு, பெண்களுக்கு, விவசாயிகளுக்கு எதிரான ஆட்சி.
மதத்தை இழுப்பது பஜாகவினருக்கு பழக்கம், அவர்களுக்கு RSS பயிற்சி கொடுத்து மதத்தை இழுப்பதும், போராடுப்பவர்களை ஒடுக்குவது பாஜகவின் பணி. இல்லாத ஒன்றை பெரிதாக்குவார்கள். உண்மையான விவசாயிகள் போராட்டம். கடந்த முறை 700 மேற்பட்ட விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த முறை ஒரு விவசாயி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.
அண்ணாமலை சொல்வதெல்லாம் முழு பொய், முழு பூசணிக்காய் மறைப்பது போல தான் அண்ணாமலை பேசுகிறார். அவர் பேசுவதை பொருட்படுத்த அவசியம் இல்லை. ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசியவர் அவர். முன்னுக்குப் பின் முரணாக பேசுவது, அவருடைய பயிற்சி.
எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்கு வந்த மோடி தற்போது கட்டிடத்தை திறந்து வைக்க வருகை தந்தால் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம். வேற ஏதாவது அவர் துவங்கி வைத்த திட்டங்களுக்கு முடித்து வைக்க வந்திருந்தால் வரவேற்கலாம். ஆனால், 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அடிக்கல் என்று புறப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாடு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள், தமிழர்கள் ஏமாறுபவர்கள் அல்ல"
இவ்வாறு எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.