For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லி அணியிலிருந்து அடுத்தடுத்து விலகும் வீரர்கள்!

11:54 AM Mar 15, 2024 IST | Web Editor
டெல்லி அணியிலிருந்து அடுத்தடுத்து விலகும் வீரர்கள்
Advertisement

ஐபிஎல் 2024 தொடரில் இருந்து காயம் காரணமாக லுங்கி இங்கிடி விலகியுள்ளார். 

Advertisement

17-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.  இதன் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 23-ந் தேதி இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகிறது.

இந்நிலையில் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரும், டெல்லி அணி வீரருமான லுங்கி இங்கிடி விலகி உள்ளார்.  14 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் இங்கிடி.  இவருக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கை டெல்லி அணி வாங்கியுள்ளது.  இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.

இதற்கு முன்பு தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஹாரி ப்ரூக் டெல்லி அணியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement