”அதிமுக ஆட்சி அமையும்போது விவசாயிகளுகான திட்டங்கள் செயல்படுத்தப்படும்” - எடப்பாடி பழனிசாமி
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, திருவாரூரில் இன்று விவசாயி பிரதிநிதிகளை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பேசிய அவர்,
”காவிரியை 20 மாவட்ட மக்கள் காவிரிநீரை குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ளனர். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இன்றைய ஆட்சியாளர்கள் பிரதான பிரச்னையான காவிரி பிரச்னையை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
மத்தியில் இருந்த பாஜக, காங்கிரஸ், குஜ்ரால், தேவகவுடா, விபி சிங் என 16 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒரே கட்சி திமுக. அப்போதெல்லாம் காவிரி பிரச்னையை தெரிந்தும் தெரியாதது போலிருந்தனர். திமுக லோக்சபையில் கொண்டுள்ள 39 உறுப்பினர்களை கொண்டு அழுத்தம் கொடுத்து காவிரி பிரச்னையை சரி செய்யலாம். ஆனால் திமுகவிற்கு இதிலெல்லாம் அக்கறையில்லை” என்று குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், ”ஆதிமுக ஆட்சியில் விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்க நவீன முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கான கருவிகள் பெற ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி வந்த பிறகு ஆன்லைன் நடைமுறை கைவிடப்பட்டு விட்டது. மேலும் வேண்டுகிற நபர்களுக்கு விவசாய கருவிகள் வழங்கப்பட்டது. கால்நடை வளர்ப்பிற்காக சேலம் மாவட்டத்தில் ஆசியாவிலேயே பெரிய கால்நடைப்பூங்கா ரூபாய் ஆயிரத்து 50 கோடி மதிப்பில் 1020 ஏக்கரில் அமைக்கப்பட்டு ஒரு பகுதி மட்டும் திறக்கப்பட்டது. கால்நடை மருத்துவக்கல்லூரி முடியும் தருவாயில் இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் அவற்றை அப்படியே பூட்டி விட்டனர். அதிமுக ஆட்சி அமையும்போது கால் நடைபூங்கா திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் மேலும், விவசாயிகளுக்கு வருவாய் தரக்கூடிய
திட்டங்கள் செயல்படுத்தப்படும்" என்றும் தெரிவித்தார்.