சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு!
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பிரேசில். இந்த நாட்டின் சவோ பாலோ நகரில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் விமானி, விமான உரிமையாளர் என 2 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிகிறது.
பாரா பாண்டா என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமானம் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானம் பரபரப்பான சாலையில் விழுந்து மளமளவௌ தீப்பற்றி எறிந்தது. விமானம் மோதியதில் பேருந்து சேதமடைந்ததது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் இந்த விபத்து குறித்து போலீசார் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், விபத்துக்குள்ளான பகுதியில் மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.