For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டம்' - ஏல அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!

தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
11:07 AM Feb 27, 2025 IST | Web Editor
 ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டம்    ஏல அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு
Advertisement

தமிழகம் உட்பட நாடு முழுவதும் 25 வட்டாரங்களில் ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது (Opean Acreage Licensing Policy) என்ற ஹைட்ரோகார்பன் எடுப்புக் கொள்கையின் கீழான 10ம் சுற்று ஏலத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisement

இதில் தமிழக தெற்கு பகுதியில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தொடங்கி கன்னியாகுமரி வலையிலான ஆழ்கடல் பகுதியில் 9990.96 சதுர கிலோமீட்டர் பரப்பும் இடம்பெற்றுள்ளது. இதேபோல நாடு முழுவதும் 25 வட்டாரங்களைச் சேர்ந்த 1,91,986 சதுர கிலோமீட்டர் கடற்பகுதிகள் ஹைட்ரோகார்பன ஏல அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.

எரிவாயு எடுக்கும் பணிகளை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதி வரை தங்களுக்கு விருப்பமான இடங்களுக்காக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஆழ்கடல் பகுதியில் எரிவாயு எடுக்க அனுமதி வழங்கினால் மீன்வளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags :
Advertisement