For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

5ம் கட்ட மக்களவைத் தேர்தல் : 49 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவு..!

07:16 AM May 18, 2024 IST | Web Editor
5ம் கட்ட மக்களவைத் தேர்தல்   49 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவு
Advertisement

5ம் கட்ட மக்களவைத் தேர்தலையொட்டி, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி, லக்னோ உள்ளிட்ட 49 தொகுதிகளில் இன்று (மே 18) பிரசாரம் நிறைவடைகிறது.

Advertisement

நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு தற்போது வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முறையே 66.14%, 66.71% மற்றும் 65.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. 4ம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 64% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், 5ம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (மே 20) நடைபெற உள்ளது.

5ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் நடைபெற உள்ளது. அதில் பீகார் (5), ஜம்மு & காஷ்மீர் (1), லடாக் (1), ஜார்க்கண்ட் (3), மகாராஷ்டிரா (13), ஒடிசா (5), உத்தரபிரதேசம் (14) மற்றும் மேற்குவங்கம் (7) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

மக்களவை 5ம் கட்டத் தோ்தலை நாளை மறுநாள் (மே 20) நடைபெறவுள்ள நிலையில், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி, லக்னோ உள்பட 49 தொகுதிகளில் இன்று (மே 18) பிரசாரம் நிறைவடைகிறது. உத்திரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் காங்கிரஸின் கே.எல்.சர்மா போட்டியிடுகின்றனர். ராகுல் காந்தி ரேபரேலியில் களம் காண்கிறார். லக்னோவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகாரில் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக அறியப்படுகின்றனர்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் கல்யாணைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீகாந்த் ஷிண்டே, மும்பை வடக்கிலிருந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மூத்த வழக்கறிஞர் உஜ்வல் நிகம் மற்றும் மும்பை வடமத்தியத்தில் மும்பை பிராந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வர்ஷா கெய்க்வாட் போட்டியிடுகின்றனர்.

Tags :
Advertisement