5ம் கட்ட மக்களவைத் தேர்தல் - இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது!
5ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
5-ஆம் கட்டத் மக்களவை தேர்தலையொட்டி, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி, லக்னோ உள்பட 49 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவடைந்தது. பீகார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், காஷ்மீர், லடாக் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இன்று மாலையுடன் ஓய்வு பெற்றது.