For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.2 குறைப்பு - மத்திய அரசு அறிவிப்பு!

10:07 PM Mar 14, 2024 IST | Web Editor
பெட்ரோல்  டீசல் விலை தலா ரூ 2 குறைப்பு   மத்திய அரசு அறிவிப்பு
Advertisement

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 2 ரூபாய் குறைக்கப்படுவதாக மத்திய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Advertisement

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையே, தொடர்ந்து 663-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்கப்படுகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் ரூ.94.24 விற்கு டீசல் விற்கப்படும் நிலையில் 92.34 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை சென்னையில் ரூ.102.63 இருந்த நிலையில் ரூ.100.63 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு நாளை காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Tags :
Advertisement