For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா?

01:00 PM Dec 16, 2023 IST | Web Editor
பாகிஸ்தானில் பெட்ரோல்  டீசல் விலை எவ்வளவு தெரியுமா
Advertisement

பாகிஸ்தான் காபந்து அரசாங்கம் பெட்ரோல் மற்றும் ஹை-ஸ்பீடு டீசல் விலையை அடுத்த 15 நாட்களுக்கு குறைத்துள்ளது.

Advertisement

பாகிஸ்தானில் பெட்ரோல்,  டீசல் விலையை வரலாறு காணாத அளவுக்கு பாகிஸ்தான் அரசு உயர்த்தியது.  மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.  இந்த சூழலில், சர்வதேச சந்தையில் எரிப்பொருள்களின் விலைகள் கடந்த 2 நாள்களில் கிட்டத்தட்ட 5 சதவிகிதம் குறைந்துள்ளது.  அதே நேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சிறிதளவு உயர்ந்துள்ளது.  இதன் விளைவாக நுகர்வோரின் உள்நாட்டு விலைகள் வீழ்ச்சியடைந்தன.

இதையும் படியுங்கள்: 14 நாட்களில் ரூ.772 கோடி – வசூல் வேட்டையில் ‘அனிமல்’..!

இதனால் எரிப்பொருள்களின் விலைகள் அடுத்த 15 நாள்களுக்கு (டிச. 15) முதல் குறையும் என தகவலறிந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  இந்த நிலையில், பாகிஸ்தான் காபந்து அரசாங்கம் பெட்ரோல் மற்றும் ஹை-ஸ்பீடு டீசல் விலையை அடுத்த 15 நாட்களுக்கு குறைத்து உத்தரவிட்டுள்ளது.  இதையடுத்து பாகிஸ்தான் நிதி அமைச்சகத்தின் அறிவிப்பை மேற்கோள் காட்டி, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.14 குறைக்கப்பட்டு ரூ.267.34-க்கும்,  ஹை- ஸ்பீடு டீசல் விலை லிட்டருக்கு ரூ.13.5 குறைக்கப்பட்டு ரூ.276.21-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  இதே போன்று மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10.14 குறைக்கப்பட்டு ரூ.191.02-க்கும், லைட்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.11.29 குறைக்கப்பட்டு ரூ.164.64-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
Advertisement