#Whatsapp, இமெயில் அனுப்பிய மனுதாரர் | வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி அறிவிப்பு!
தனிப்பட்ட முறையில் வாட்ஸ்-ஆப், இமெயில் அனுப்பிய நிலையில், நீதிமன்றத்தின் கண்ணியத்தை பேணுவதற்காக வழக்கில் இருந்து விலகுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற விக்னேஷ்வரன், சான்று சரிபார்ப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நடைபெற்று வந்தது.
இதனிடையே, வழக்கு தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் மின்னஞ்சலுக்கும், அவரது வாட்ஸ்-ஆப் எண்ணுக்கும் மனுதாரர் விக்னேஷ்வரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், நேரடியாக தனக்கு கடிதம் அனுப்பியது குறித்து மனுதாரர் தன்னிடம் ஏதும் தெரிவிக்கவில்லை என்று கூறி, நீதிமன்றத்தின் கண்ணியத்தை பேணுவதற்காக வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார்.
இதையும் படியுங்கள் : ரூ.68 கோடி மோசடி செய்ததாக #KarnatakaCM சித்தராமையா மீது மேலும் ஒரு புகார்!
இந்த வழக்கை தான் விசாரிக்க விரும்பவில்லை எனக் கூறிய நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.