'லால் சலாம்' திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி மனு!
'லால் சலாம்' திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதிக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழர்களை கொச்சைப்படுத்தியதாக லால்
சலாம் திரைப்படத்தின் கதாநாயகி நடிகை தன்யா பாலகிருஷ்ணா மீதும் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மற்றும் லைக்கா நிறுவனத்தின் மீதும் சமூக ஆர்வலர் RTI activist செல்வம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆன்லைன் மூலம் அவர் கொடுத்துள்ள புகாரில், தெரிவித்திருப்பதாவது0:
"நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தில்
‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில்நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை தன்யா பாலகிருஷ்ணா நடித்துள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த நடிகை தன்யா பாலகிருஷ்ணா துணை நடிகையாக சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் நடிகை தன்யா
பாலகிருஷ்ணா அவரது சமூக வலைதள பக்கத்தில் தமிழர்களை மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார்.
இதையும் படியுங்கள்: அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் – இந்திய அளவில் டிரெண்ட் ஆகும் ‘தமிழக வெற்றி கழகம்’!
நடிகை தன்யா பாலகிருஷ்ணா போட்ட பதிவு தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி தமிழர்களான எங்களது உணர்வை மிகவும் பாதித்துள்ளது. இது பொது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால், துணை நடிகை தன்யா பாலகிருஷ்ணா கதாநாயகியாக நடித்துள்ள லால் சலாம் படத்தை வெளியிட்டால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால் லால் சலாம் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதிக்க வேண்டும்.
மேலும், தமிழ் மக்களின் மனதை புண்படுத்தவும், அமைதியாக வாழ்ந்து
கொண்டிருக்கும் எங்களின் மத்தியில் கலகத்தை உண்டு பண்ணும் நோக்கத்திலும்
நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை வேண்டுமென்றே இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்துள்ள லால் சலாம் படத்தின் இயக்குனரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான
ஐஸ்வர்யா மீதும், லால் சலாம் படத்தை தயாரித்துள்ள லைக்கா தயாரிப்பு நிறுவன
உரிமையாளர் சுபாஸ்கரன் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.